ஐரோப்பாவில் முதல் தடவையாக சுவிஸ் ஸ்ரீவிஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தில் தீமிதிப்பு சனிக்கிழமை காலை நடைபெற்றது.
சுவிஸ் ஸ்ரீவிஷ்ணு துர்க்கை அம்மனின் வருடாந்த தேர்த்திருவிழாவை முன்னிட்டே தீமிதிப்பு இடம்பெற்றது. பெருந்தொகையான பக்தர்கள் தீமித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய பூசகர் வருகை தந்து தீமிப்பை நடத்தி வைத்தார்.
சுவிட்சர்லாந்தின் பல மாநிலங்களிலிருந்தும் பெருந்தொகையான மக்கள் வருகைதந்து தேர்த்திருவிழாவில் கலந்து கொண்டதுடன்-காவடி, பாற்செம்பு, எடுத்தும் அங்கப்பிரதட்சணை செய்தும் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
நன்றி-தினக்கதிர் இணையம்