அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்திற்கான புதிய கட்டிடம்-மிக விரைவில் திறந்துவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பாடசாலையின் அதிபர் திரு எம்.பத்மநாதன் அவர்களின் அயராத கடும் முயற்சியின் பலனாகவே-இப்புதிய கட்டிடம் அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட கட்டிடப்பணிகள் தற்போது இறுதிக்கட்டதை அடைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்லைப்பிட்டியில் நூற்றாண்டு பழமைவாய்ந்த,றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் யுத்த அனர்த்தங்களால் முற்றாக சிதைவடைந்து கைவிடப்பட்டிருந்த நிலையில்-அதிபர் எம்.பத்மநாதன் அவர்கள் படிப்படியாக எடுத்துக் கொண்ட கடும் முயற்சியின் பலனாகவே -120 அடியில் இப்புதிய பாடசாலைக்கட்டிடம் அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலதிக தகவல்கள் பின்னர் இணைக்கப்படும்.