நயினாதீவைச் சேர்ந்த,விஜேந்திரன் (இந்திரன்)-கேதாரகௌரி தம்பதிகளின் ஏகபுத்திரி திருநிறைச் செல்வி விதுர்ஷனா அவர்களின் பூப்புனித நீராட்டு விழா 21.07.2016 வியாழக்கிழமை அன்று யாழ் நாச்சிமார் கோவிலடியில் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நயினை ஸ்ரீ அபிராமி வீடியோ உரிமையாளரான, திரு விஜேந்திரன் (இந்திரன்)அவர்கள் கடந்த பல வருடங்களாக,அல்லையூர் இணையத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிவருபவராவார்.
யாழ் தீவகத்தில் நடைபெறுகின்ற,நிகழ்வுகளை சிறப்பாக வீடியோப் பதிவு செய்து பலரின் பாராட்டைப்பெற்று வருவதோடு-நயினை நாகபூசனி-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி விநாயகர்-மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர்-மண்டைதீவு முகப்பு வயல் முருகன்-சாட்டி மாதா-வேலணை பெருங்குளம் முத்துமாரி-அல்லைப்பிட்டி புனித பிலிப்பு நேரியார்-கார்மேல் அன்னை என,அனைத்து ஆலய திருவிழாக்கள் அனைத்தையும் நேர்த்தியாகப் பதிவு செய்து-எமது இணையத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவுள்ளார்.
விஜேந்திரன் (இந்திரன்)-கேதாரகௌரி தம்பதிகளின் ஏகபுத்திரி திருநிறைச் செல்வி விதுர்ஷனாவை,எல்லாம் வல்ல நயினை ஸ்ரீ நாகபூசனி அம்மனின் அருள் வேண்டி- அல்லையூர் அறப்பணிக் குடும்பத்தினர் சார்பில் வாழ்த்துகின்றோம்.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-நிழற்படங்களின் தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது. வீடியோப் பதிவு பின்னர் இணைக்கப்படும்.