அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள புனித கார்மேல் அன்னையின் வருடாந்த,பெருநாள் விழாவின் போது- 16.07.2016 சனிக்கிழமை அன்று-அமரர்கள் திரு,திருமதி இரத்தினசபாபதி-சிவயோகலட்சுமி தம்பதியினரின் ஞாபகார்த்தமாக-பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
அமரர்கள் இரத்தினசபாபதி-சிவயோகலட்சுமி தம்பதியினரால் -புனித அன்னையின் வருடாந்த,பெருநாள் விழாவிற்கு-காலங்காலமாக , அன்னதானம் வழங்குவது வழமையான ஒன்றாகவே முன்னர் இருந்து வந்தது.
அன்னார்களின் மறைவுக்குப் பின்னரும்-யுத்த அனர்த்தங்களுக்கிடையிலும்-அப்பணியினை,அமரர் இரத்தினசபாபதி-அவர்களின் மைத்துனரான, பெரியவர் நடேசபிள்ளை அவர்கள் தொய்வின்றி முன்னெடுத்து வந்தார்.
பெரியவர் நடேசபிள்ளை அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அதிகவேலைப்பளு மற்றும் மூப்பின் காரணமாக-அவரைச்சிரமப்படுத்தாது-அமரர்கள் இரத்தினசபாபதி-சிவயோகலட்சுமி தம்பதியினரின் பிள்ளைகளின் ஒன்றுபட்ட நிதியுதவியுடனும்-வேண்டுகோளுடனும்-கடந்த நான்கு வருடங்களாக-அல்லையூர் இணையம் பொறுப்பெடுத்து-பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களின் நேரடி மேற்பார்வையில் அன்னதான நிகழ்வினை சிறப்பாக நடத்தி வருகின்றது.
இவ்வருடமும் கடந்த வருடத்தைப் போல -ஆயிரம் உணவுப் பொட்டலங்கள்-புனித அன்னையின் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட நிகழ்வில், அமரர்கள் இரத்தினசபாபதி-சிவயோகலட்சுமி தம்பதியினரின் புதல்வி திருமதி சேனாதிராஜா கௌரிநாயகி அவர்கள் நேரடியாகக் கலந்து கொண்டு உணவுப் பொட்டலங்களை வழங்கி வைத்து-அன்னதானப் பணிக்கு மேலும் சிறப்புச் சேர்த்தார்.
அல்லைப்பிட்டி என்ற இச்சிறிய கிராமத்தில்-அமைந்துள்ள புனித கார்மேல் அன்னையின் ஆலயத்தில் மட்டுமே-அனைத்து மக்களும் அன்னையின் வருடாந்த பெருநாளுக்கு ஒன்று கூடுவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
“அல்லையூர் இணையத்தின் 1000 தடவைகள் அன்னதானம்” என்னும் அன்னதானப்பணியின் 140வது சிறப்பு நிகழ்வாக-இந்நிகழ்வு அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.