பிரான்ஸில் குழந்தைகள்,பெண்கள் என,ஈவிரக்கமின்றி  கொன்றொழிக்கப்பட்ட அப்பாவி மனித உயிர்கள்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

பிரான்ஸில் குழந்தைகள்,பெண்கள் என,ஈவிரக்கமின்றி கொன்றொழிக்கப்பட்ட அப்பாவி மனித உயிர்கள்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

பிரான்ஸ் நீஸ் நகரில் மக்கள் கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்தி 85க்கும் மேற்பட்டவர்களை படுகொலை செய்த நபர் துனிசிய நாட்டை பூர்வீகமாக கொண்ட 31வயதுடைய முஸ்லீம் நபர் என்றும் இவர் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர் என பிரான்ஸ் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரின் அடையாள அட்டையும் மீட்கப்பட்டுள்ளது. இவர் பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்றிருந்தார்.

பிரான்ஸ் நீஸ் நகரில் வியாழன் நள்ளிரவு 11மணியளவில் இஸ்லாமிய பயங்கரவாதி ஒருவன் மக்கள் குழுமியிருந்த கூட்டத்தில் ஹண்டைனர் லொறியை ஏற்றியதில், 85 பேர் பலியாயினர்; 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இறந்தவர்களில் சிறுவர்கள் பெண்களும் அடங்குகின்றனர். 18பேர் ஆபத்தான கட்டத்தில் உள்ளனர்.

பிரான்ஸ் நாட்டின் தேசிய விடுமுறை நாளான பாஸ்டில் தின கொண்டாட்டத்தையொட்டி, நீஸ் நகரில் நதிகரையை அண்டிய பகுதியில் நடந்த வாண வேடிக்கையை காண ஆயிரக்கணக்கான மக்கள் குழுமியிருந்தனர்.

அங்கு ஹண்டைனர் லொறி ஒன்று வேகமாக செலுத்தி வந்து மக்கள் மீது மோதியது. சமகாலத்தில் லொறியை செலுத்தி வந்த நபர் மக்கள் கூட்டத்தில் குண்டை வீசியதுடன் துப்பாக்கி பிரயோகமும் செய்தார்.

ஹண்டைனர் லொறியை ஓட்டி வந்த பயங்கரவாதி அதிக வேகத்தில் வந்து கூட்டத்தில் 2 கிலோ மீற்றர் வரை லொறியை செலுத்தியதாகவும், பின் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் அப்பயங்கரவாதி கொல்லப்பட்டுள்ளார்.
இது ஒரு பயங்கரவாத தாக்குதல் எனவும், ஹண்டைனர் லொறியில் கையெறி குண்டுகளும், ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இப்பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியவர் துனிசியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் பிரெஞ்சுக் குடியுரிமை பெற்றவர் என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

லொறியைச் சோதனையிட்ட போது கனரக ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது அடையாள அட்டை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கு கைக்குண்டுகள் ஏ.கே.47 மற்றும் பல கனரக ஆயுதங்கள் பாரஊர்திக்குள் இருந்துள்ளன. இது இஸ்லாமிய பயங்கரவாதிகளான தயேஸின் தாக்குதல் எனப் பயங்கரவாதத் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மிகவும் திட்டமிட்டு நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸில் ஏற்கனவே அமலில் உள்ள அவசர நிலை மேலும் மூன்று மாத காலம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி பிரான்ஸ் பரிஸ் நகரில் நான்கு இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூடு கைக்குண்டு வீச்சுக்களில் சுமார் 130பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். இத்தாக்குதலை ஐ.எஸ்.என்று அழைக்கப்படும் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கத்தினர் நடத்தியிருந்தனர்.

நன்றி-தினக்கதிர்

BBulPbu BBumb0Z (1) BBumikw BBulInV

francefrance 2france 3

Leave a Reply

}

Hit Counter provided by technology news