அல்லையூர் இணையத்தின் இயக்குநர் திரு செல்லையா சிவா அவர்களின் 49வது பிறந்த நாளை முன்னிட்டு-02.07.2016 சனிக்கிழமை அன்று தாயகத்தில் சில அறப்பணி நிகழ்வுகள் நடைபெற்றன.
தாயகத்தில் 1000 தடவைகள் அன்னதானம்-என்னும் உயரிய பணியினை மேற்கொண்டு வரும் அல்லையூர் இணையம்-இதுவரை 137 தடவைகள் அன்னதானம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். தொடர்ந்தும் உங்கள் பேராதரவோடு -இப்பணியினை முன்னெடுத்துச் செல்வோம் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இப்பதிவு புகழுக்காகவோ அல்லது விளம்பரத்திற்காகவோ அல்ல…நீங்களும் இப்பணியில் இணைந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே…..
அல்லையூர் இணையத்தின் இயக்குநர் திரு செல்லையா சிவா அவர்களின் 49வது பிறந்த நாளை முன்னிட்டு 02.07.2016 அன்று நடைபெற்ற-அறப்பணிகளின் விபரங்கள் வருமாறு….
01-கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல வளாகத்தில் அமைந்துள்ள-சர்வசக்தி அம்மன் ஆலயத்தில் காலை விஷேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
02-கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் இல்ல மாணவர்களுக்கு,காலை சிறப்புணவு வழங்கப்பட்டது.
03-யாழ் கைதடியில் அமைந்துள்ள விழிப்புலன் இழந்த,சகோதர சகோதரிகளுக்கு மதிய சிறப்புணவு வழங்கப்பட்டது.
04-அல்லைப்பிட்டியில் O/L படித்த வறுமைக்கோட்டின் கீழ் வாழும் இரு மாணவிகளின் தாதியர் பயிற்சிநெறிப் படிப்பிற்காக-Dr யதுநந்தன் அவர்களிடம் 30 ஆயிரம் ரூபாக்கள் வழங்கப்பட்டன.
05-அல்லைப்பிட்டி கிழக்குப் பகுதியில் இயங்கும் மழலைகள் பாடசாலையின் விளையாட்டுப் போட்டிக்காக-5 ஆயிரம் ரூபாக்கள் வழங்கப்பட்டன.
கீழே படங்கள் ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.