யாழ் தீவகம் வேலணையில்,கலைப்பொக்கிஷமாக வாழ்ந்து வரும் கலைஞர்-கலாபூஷணம் நல்லான் தங்கவேலு அவர்களின் கலைத்திறமையினைப் பாராட்டி- வேலணை பிரதேச செயலகத்தின் கலாச்சார பேரவையின் அனுசரணையுடனும்- வேலணை மக்களின் ஒத்துளைப்புடனும் 2016/06/24 வெள்ளிக்கிழமை அன்று மாலை – வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் அவருக்குப் பாராட்டு விழாவும், அவரால் தயாரிக்கப்பட்ட “அரிச்சந்திர மயாணகாண்டம்” என்ற ஒலிப்பேழையும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், வேலணை பிரதேச செயலாளர் மற்றும் ,பெரியவர் s.p.சாமி அவர்கள் உட்பட பல பிரமுகர்களும் பாெது மக்களும் கலந்து கொண்டனர்.
தமிழர்களின் பாரம்பரிய கலைகளான நாடகம்,நாட்டுக்கூத்து, பறை வாத்தியம் வாசித்தல், என்பவற்றில் திறமைத் தேர்ச்சி பெற்றவரான,வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்திலுள்ள இருபத்தொரு வேம்படி கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்டவரும்,சிறந்த கடவுள் பக்தியாளரும்,அருகிவரும் தமிழர்களின் பாரம்பரிய கலையை அழியாமல் காப்பாற்றப் பாடுபடும் மனிதர்களில் ஒருவராகவும், குடும்ப வறுமையிலும் கலைக்காக ஓய்வின்றி உழைத்து வரும் , பெரியவர் நல்லான் தங்கவேலு அவர்களின் அபாரத் திறமையினை இனம் கண்டு- இலங்கை அரசின் உயரிய விருதான கலாபூஷணம் விருது 2014 ம் ஆண்டு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.































