யாழ் தீவகத்தின் புண்ணியபூமி என அழைக்கப்படும்-நயினாதீவிலிருந்து சமூக வலைத்தள ஊடகவியலாளராக,சிறப்பாக பணியாற்றி வரும்-திரு நயினை எம்.குமரன் அவர்களை,நயினை அபிவிருத்திக்கழகம் பிரான்ஸ் கிளையின் நிர்வாக,உறுப்பினர்கள் நேரடியாகச் சென்று பொன்னாடை போர்த்தி,மலர்மாலை சூட்டி,ஊடக வேந்தன் என்னும் சிறப்புப்பட்டம் வழங்கி அக மகிழ்ந்தனர்.
இந்நிகழ்வில்,நயினை அபிவிருத்திக்கழகம் பிரான்ஸ் கிளையின் செயலாளர் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டதுடன்-பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டு வாழ்த்துத் தெரிவித்தனர்.
யாழ் தீவகத்தில் முதற்தடவையாக,ஒரு சமூக வலைத்தள ஊடகவியலாளரை,கௌரவித்த நிகழ்வாக இது அமைந்துள்ளது.
நயினை எம்.குமரனின் பணிகள் மேலும் சிறக்க-அல்லையூர் இணையமும் வாழ்த்தி நிற்கின்றது.