ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் பெரிய பிரித்தானியா மூன்றாக உடையும் அபாயம்? சிறப்புப் பார்வை இணைப்பு!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் பெரிய பிரித்தானியா மூன்றாக உடையும் அபாயம்? சிறப்புப் பார்வை இணைப்பு!

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுமா என நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பிரித்தானியாவில் உள்ள பெரும்பான்மை வாக்காளர்கள் , ஐரோப்பிய ஒன்றியத்துடனான 43 ஆண்டு கால உறவை முடிவுக்குக் கொண்டுவர வாக்களித்திருக்கிறார்கள்.

வாக்களித்தவர்களில் 51.9 சதவீதத்தினர் , பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று வாக்களித்திருக்கிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்திலேயே பிரித்தானியா தொடர்ந்து இருக்கவேண்டும் என்று 48.1சதவீதத்தினர் வாக்களித்திருக்கிறார்கள்.

இங்கிலாந்து ஸ்கொட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து என நான்கு தேசங்களை உள்ளடக்கிய பெரிய பிரித்தானியா கடந்த 43 வருடங்களாக ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகித்து வருகிறது.

லண்டன் மற்றும் வேல்ஸ் பகுதிகளில் உள்ள பெரும்பான்மையான மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டும் என வாக்களித்திருக்கிறார்கள். ஸ்கொட்லாந்து அயர்லாந்து ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் இணைந்திருக்க வேண்டும் என வாக்களித்திருக்கிறார்கள்.

ஸ்கொட்லாந்தின் முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் , ஐரோப்பிய ஒன்றிய வாக்கெடுப்பு முடிவுகள் , ஸ்கொட்லாந்து மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திருப்பதையே தங்கள் எதிர்காலமாகப் பார்க்கிறார்கள் என்பதைக் காட்டுகின்றன என்று கூறியிருக்கிறார்.

ஸ்கொட்லாந்து ஐக்கிய ராஜ்ஜியத்துடன் இணைந்திருக்க வேண்டுமா என்று மக்களின் கருத்துக்களை அறிய மற்றுமொரு கருத்துக்கணிப்பு நடப்பதற்கான சாத்தியக்கூறு வெகுவாக அதிகரித்துவிட்டதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து அங்கம் வகிப்பதால் பிரித்தானியாவின் பாதுகாப்பு ஒருமைப்பாடு, இறையாண்மை ஆகியன பாதிக்கப்படுவதாக பிரிய வேண்டும் என்ற பிரசாரத்தை செய்தவர்கள் கூறிவந்தனர். இதனை பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவில் உள்ள பெரும்பான்மை மக்கள் எடுத்த முடிவு பெரியபிரித்தானியாவின் ஒருமைப்பாட்டிற்கும் பாதிப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.
இங்கிலாந்திலிருந்திலிருந்து ஸ்கொட்லாந்து, வடஅயர்லாந்து ஆகிய தேசங்கள் பிரிந்து செல்வதற்கு முற்படலாம், இதனால் பெரிய பிரித்தானியா உடைந்து போகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

மறுபுறத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா பிரிந்து சென்றால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்கு சென்று குடியேறுபவர்களுக்கு சமூக நல உதவிகள் கிடைக்காது. திருமண பந்தம் உட்பட நியாயமான காரணம் இன்றி பிரித்தானியாவில் குடியேற முடியாது. இது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் குடியுரிமை பெற்று வாழும் வெளிநாட்டவர்களை பெரிதும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

EU-599679

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux