இலங்கையில் நடந்து முடிந்த,கொடிய யுத்தத்தின் பரிசாக உடல் உறுப்புகளை இழந்த பல நூறு மக்கள் வலி சுமந்தபடி வாழ்ந்து வருவது நாம் அறிந்த செய்தியாகும்.
இக்கொடிய யுத்தத்தில் அகப்பட்டு கால்களை இழந்த 1500 பேருக்கு, தொண்டு நிறுவனம் ஒன்றினால்,நவீன முறையில் தாயாரிக்கப்பட்ட-செயற்கை கால்கள் பொருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.
யாழ் மாவட்டத்தில் 200 பேருக்கும்,
ஏனைய மாவட்டங்களான,மன்னார்,வவுனியா,கிளிநொச்சி,முல்லைதீவு,மட்டக்களப்பு,அப்பாறை,திருகோணமலை ஆகிய இடங்களில் வசிக்கும் 1500 பேருக்கும் படிப்படியாக இச்செயற்கை கால்கள் பொருத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.