யாழ் தீவகம் தெற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமங்களில்-தெரிவு செய்யப்பட்ட 22 பயனாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாக்கள் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன.
வேலணை பிரதேச செயலர் திருமதி சுகுணரதி தெய்வேந்திரம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற-நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட பயனாளர்கள் அழைக்கப்பட்டு-அவர்களிடம் நேரடியாக வழங்கப்பட்டன.
வாழ்வாதாரத்திற்கு பெரிதும் பயன்தரும் கால்நடைகளே வழங்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.