தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு சிறிதரன் அவர்களின் அன்புத் தந்தையாரும்,லங்காசிறி,தமிழ்வின்,மனிதன் ஆகிய பிரபல இணையத்தள இயக்குநர்களின் அன்புத் தந்தையாருமாகிய,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,பெரியவர் சின்னத்துரை சிவஞானம் அவர்கள் கடந்த 25.05.2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் ஈமைக்கிரியை,29.05.2016 ஞாயிறு அன்று வட்டக்கச்சியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில்நடைபெற்று -பின்னர் பூதவுடல் வட்டக்கச்சி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
வட்டக்கச்சியில் நடைபெற்ற-அன்னாரின் இறுதி நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அல்லைப்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்ட-பெரியவர் சின்னத்துரை சிவஞானம் அவர்களின் இறுதி நிகழ்வுகளை,அல்லையூர் இணையம் ஆர்வத்தோடு முழுமையாகப் பதிவு செய்து உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.
கடந்த வருடம் பரிஸில் வைத்து-அல்லையூர் இணையத்தினால், பெரியவர் சின்னத்துரை சிவஞானம் அவர்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்-என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.