தீவகம் அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள புனித பிலிப்பு நேரியாரின் வருடாந்த திருவிழா கடந்த 17-05-2016 திங்கட்கிழமை அன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி-தொடர்ந்து 25.05.2016 புதன்கிழமை மாலை நற்கருணை விழாவும்-மறுநாள் 26-05-2016 வியாழக்கிழமை அன்று காலை வருடாந்த பெருநாள் விழாவும் வெகு சிறப்பாக நடைபெற்று கொடியிறக்கலுடன் வருடாந்த திருவிழா நிறைவு பெற்றது.
அல்லைப்பிட்டியில் புனித பிலிப்புநேரியார் பங்கு மக்களே பெரும்பான்மையாக வசித்து வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இம்முறை கனடாவில் வன்கூவர் பகுதியில் வசிக்கும்-புனித பிலிப்புநேரியார் ஆலய நிர்வாக உறுப்பினரும்,கடின உழைப்பாளியுமான,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,பெரியவர் அருளானந்தம் அவர்கள் தமது மனைவியுடன் பெருநாள் விழாவில் கலந்து கொண்டார் என்று தெரிய வருகின்றது. வழமைபோல அல்லையூர் இணையத்தினால்-புனித பிலிப்புநேரியாரின் வருடாந்த பெருநாள் விழா நேர்த்தியாக நிழற்படங்களாக,காணொளியாக பதிவு செய்யப்பட்டு கீழே இணைக்கப்பட்டுள்ளது.