யாழ் தீவகம் வேலணை சரவணையில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும்- கந்தன் தோட்டம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா கடந்த 20-05-2016 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற போது- தேரேறி வீதியுலா வந்த முருகனின் தேர் சில்லு சேற்றுக்குள் புதைந்ததால் பக்தர்கள் பெருங் கவலை கொண்டனர்.
பக்தர்கள் கடும் முயற்சி மேற்கொண்ட போதிலும்-தேர் சேற்றுக்குள்ளிருந்து நகர மறுத்ததால்,வேறு வழியின்றி தேரில் இருந்து முருகன் இறக்கப்பட்டு சகடையில் வீதியுலா வந்த காட்சி இடம் பெற்றதாக தெரிய வருகின்றது.
மகோற்சவத்திற்கு முன்னர் தொடர்ச்சியாக பெய்த-மழை காரணமாகவே இந்நிலை ஏற்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.