கிளிநொச்சி உருத்திரபுரத்தில் அமைந்துள்ள புனித மரியா( பத்திமா) தேவாலயத்தில் கடந்த 18.05.2016 புதன்கிழமை அன்று விஷேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.
இத்திருப்பலியானது 2009ம் ஆண்டு நடைபெற்ற-இறுதி யுத்தத்தின் போது பலியான தமிழ்மக்களுக்கும்-அன்றைய நாட்களில் சிறப்பாக அறப்பணியாற்றி மறைந்த வண பிதா ம.சறத்ஜீவன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவுதினத்தினையும் முன்னிட்டே இவ்விஷேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதாகும்.
மறைந்த வண பிதா ம.சறத்ஜீவன் அவர்கள் தாம் மரணிக்கும் தறுவாயிலும்,தமிழ்மக்களுக்காக அறப்பணியாற்றிய அருளாளர் ஆவார்.
இவர் முன்னாள் உருத்திரபுரம் பகுதியின் பங்குத் தந்தையாகவும்-யேசு அகதிகள் பணி நிறுவனத்தின் (J.R.S)கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் தொடர்ந்து மக்களுக்காக பணி செய்த அருளாளர் ஆவார்.
மறைந்த வண பிதா ம.சறத்ஜீவன் அவர்களின் இழப்பு-றோமன் கத்தோலிக்க திருச்சபையினருக்கும்-தமிழ்ச் சமூகத்தினருக்கும் பேரிழப்பாகும்-என நினைவுப் பேருரையில் கூறப்பட்டது.
திருப்பலியைத் தொடர்ந்து-மறைந்த வண பிதா ம.சறத்ஜீவன் அவர்களின் உருவச்சிலைக்கும்-பொதுமக்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுச்சின்னத்திற்கும்-பூப்போட்டு-சுடரேற்றி நினைவு கூரப்பட்டது.
இந்நிகழ்வில் றோமன் கத்தோலிக்க-யாழ் மாவட்ட ஆயர் இல்லத்தின் குரு முதல்வர்களும்-றோமன் கத்தோலிக்க திருச்சபையின் அருட்சகோதரிகளும்-பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அல்லையூர் இணையத்தின் சார்பில்-அறப்பணியாளர் திரு இ.சிவநாதன் அவர்களும் கலந்து கொண்டார்.