வேலணையில்,திரு சிவஞானம் சிறிதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற-அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்-விபரங்கள் இணைப்பு!

வேலணையில்,திரு சிவஞானம் சிறிதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற-அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்-விபரங்கள் இணைப்பு!

AS-2-4

யாழ் தீவகம் தெற்கு-வேலணை பிரதேச செயலகத்தில்-கடந்த 21.05.2016 சனிக்கிழமை அன்று காலை 09 மணியளவில்-தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவஞானம் சிறிதரன் அவர்களின் தலைமையில்-பிரதேச ஒருங்கிணைப்பு முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வேலணை பிரதேச செயலர் திருமதி சுகுணரதி தெய்வேந்திரம் அவர்களுடன்-வடமாகாண  சபையின் விவசாயத் துறை அமைச்சர் திரு பொ.ஜங்கரநேசன் மற்றும்  உறுப்பினர் திரு விந்தன் கனகரத்தினம் மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் திரு ஜெகன் உட்பட பலரும் கலந்து கொண்டதாகவும்- மேலும் தீவகம் தெற்கு 30 கிராம சேவையாளர் பிரிவில் இயங்கும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கிராம சேவையாளர்களும் பெருமளவில் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில்,குடிநீர் மற்றும் விவசாயம்,கடற்றொழில் ஆகியவற்றின் அபிவிருத்தி தொடர்பாக ஆராயப் பட்டதாகவும்-மேலும் கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்துவதற்கான நிரந்தர தீர்வுகள் பற்றி மேலும் ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.

1 (3) IMG_0003 copy IMG_0005.-1JPG IMG_0005 copy (1) IMG_0004 copy IMG_0008 copy IMG_0007-1 copy IMG_0007 copy IMG_0010 copy (1) IMG_0012 copy IMG_0013 copy (1) IMG_0015 copy (1) IMG_0017 copy IMG_0021 copy (1) IMG_0018 copy IMG_0022 copy IMG_0020 copy (1)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux