அல்லைப்பிட்டி கிழக்குப் பகுதியில் பல்லாண்டு காலமாக -காவல் தெய்வமாக வீற்றிருந்து அருள்பாலிக்கும்- ஆதி வைரப்பெருமானின் வருடாந்த பொங்கல் விழா- வைகாசி விசாகத்தன்று 21.05.2016 சனிக்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
அன்று காலை ஆரம்பமான பொங்கல் விழாவினைத் தொடர்ந்து மதியம் மகேஸ்வர பூஜை நடைபெற்று-அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
கனடாவில் வசிக்கும்,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் நடராசா அவர்களின் குடும்பத்தினர்களினால்-ஆதி வைரவர் கோவில் புனரமைக்கப்பட்டு-வருடந்தோறும் பொங்கல் விழா சிறப்பாக நடத்தப்பட்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.