யாழ் தீவகம் நெடுந்தீவின் கடற்பரப்பில் வைத்து-அழிக்கப்பட்ட அப்பாவி பொதுமக்களின் (குமுதினி படுகொலை)நினைவாக-ஜக்கிய இராட்சியத்தில் இயங்கும்-நெடுந்தீவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில்-14.5.2016 சனிக்கிழமை அன்று நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் வைத்து தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
திருமதி சாரதாதேவி கிருஸ்ணதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்-வட மாகாண சபையின் விவசாயத்துறை அமைச்சர் திரு பொ.ஜங்கரநேசன் அவர்களும்-மற்றும் மாகாண சபையின் உறுப்பினரான,திரு விந்தன் கனகரத்தினம் அவர்களும் கலந்து கொண்டதாகவும்- இவர்களுடன் மேலும் மதகுருமார் இருவர் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வுக்கு வருகை தந்தவர்கள் அனைவருக்கும் தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.
குமுதினி படகில் வைத்து படுகொலை செய்யப்பட்ட- அப்பாவி மக்களின் நினைவாக-இனி வரும் காலங்களில் நெடுந்தீவில் 700 தென்னங்கன்றுகள் நாட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி-நெடுந்தீவு ஒன்றியம்(ஜக்கிய இராட்சியம்)