யாழ் தீவகத்தில் நான்கு இடங்களில் அமைக்கப்படும் நீர்த்தாங்கிகள்-அண்ணாந்து பார்த்து முணுமுணுக்கும் மக்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகத்தில் நான்கு இடங்களில் அமைக்கப்படும் நீர்த்தாங்கிகள்-அண்ணாந்து பார்த்து முணுமுணுக்கும் மக்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

IMG_0068 copy

யாழ் தீவகத்தில்,இலங்கை  நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபையால் நான்கு இடங்களில் மிகப்பெரிய நீர்த்தாங்கிகள் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மண்கும்பான் செட்டிகாட்டுப்பகுதியிலும்,வேலணை வங்களாவடிப் பகுதியிலும்,நீர்த்தாங்கி அமைக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

ஊர்காவற்றுறையிலும்,புங்குடுதீவிலும் அடுத்தடுத்து நீர்த்தாங்கிகள் அமைக்கப்படவுள்தாக தெரிய வருகின்றது.

வேலணையில் அமைக்கப்பட்ட நீர்த்தாங்கியின் பணிகள் நிறைவு பெறும் தறுவாயில் உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இப்பாரிய நீர்த்தாங்கிகளுக்குள் கொள்ளக்கூடிய குடிநீர்-எங்கிருந்து வரப்போகிறது என்பதே-தற்போதைய தீவக மக்களின் கேள்வியாக உள்ளது.

இரணைமடுத்தண்ணீரா அல்லது சுத்திகரிக்கப்பட்ட தீவக கடல்நீரா அல்லது சாட்டி நன்நீரா எதுவாக இருக்கும் என்று  விடை தெரியாத வினாவாக குழம்பிக் கிடக்கிறார்கள் தீவக மக்கள்.

இந்நிலையில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியினால்,வேலணைப்பகுதிக்கு வழங்கப்பட்ட குடிநீர் விநியோகத்தின் நேரம் 45 நிமிடங்களாக குறைக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

IMG_0067 copy

Leave a Reply