அல்லைப்பிட்டி மேற்குப் பகுதியில் கோவில் கொண்டு அருள்பாலிக்கும்-மூன்றுமுடி அம்மனுக்கு-நீண்ட காலத்தின் பின்னர் மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்லைப்பிட்டி மூன்றுமுடி அம்மனின் பக்தராகவும்-ஆலயப்பணிகளிலும் தன்னை ஈடுப்படுத்தி வந்த, அமரர் முத்துக்குமார் அவர்களின் நினைவாக-லண்டனில் வசிக்கும், அன்னாரின் இளைய புதல்வர் திரு முத்துக்குமார் சந்திரகுமார்(சந்திரன்) அவர்களினாலேயே-அம்மனுக்கு மின்சார இணைப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிய வருகின்றது.
திருடர்கள் கைவரிசை…
கடந்த திங்கட்கிழமை அன்று மின் இணைப்பு வழங்கப்பட்டு மின்குமிழ்கள் ஒளிரவிடப்பட்டதாகவும்-அன்றிரவே கைவரிசையைக் காட்டிய திருடர்கள் -பொருத்தப்பட்ட மின்குமிழ்களில் ஒன்றினை திருடிச் சென்று விட்டதாகவும்-பக்தர் ஒருவர் வருத்தத்தோடு எம்மிடம் தெரிவித்தார்.