யாழ் தீவகம் மண்கும்பானில்,கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் முருகனிடம் நாடி வரும் பக்தர்களின் பசி போக்கிடும் நோக்கோடு-ஆலய வளாகத்திற்குள் மிகப்பிரமாண்டமாக,அன்னதான மண்டபம் ஒன்று அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக,ஆலய நிர்வாகம் அல்லையூர் இணையத்திற்கு தெரிவித்துள்ளது.
நீண்ட காலத்தின் பின் -கடந்த வருடம்,பத்துநாட்கள் அலங்காரத் திருவிழா நடைபெற்றதுடன்-தொடர்ந்து ஆலயத்தினை முழுமையாகப் புனரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தற்போது வசந்த மண்டபம் மற்றும் சில உப விக்கிரகங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும்-மேலும் புலம் பெயர் நாடுகளிலோ அல்லது உள்நாட்டிலோ வசிக்கும்- முருக பக்தர்கள் இப்புனரமைப்புப் பணிகளுக்கு உதவிட முன்வருமாறும் ஆலய நிர்வாகம் அல்லையூர் இணையத்தின் ஊடாக வேண்டுகோள் விடுக்கின்றது.
அன்னதான மண்டபம் அமைக்கும் முருக பக்தர்…
பிரான்ஸில் வசிக்கும்-மண்கும்பானைச் சேர்ந்த,முருக பக்தர் ஒருவர்-காலமான தனது அன்பு மனைவியின் நினைவாக-முருகனிடம் நாடி வரும் பக்தர்களின் பசி போக்கிடும்- இடமாக இந்த அன்னதான மண்டபத்தினை மிகப்பிரமாண்டமாக அமைத்துத் தர முன்வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர் காலத்தில் பசியோடு வரும் பக்தர்களுக்கு வயிறாற உணவு வழங்கும் இடமாக மண்கும்பான் முருகனின் சந்நிதானம் விளங்கும் என நம்புகிறோம்.