பிரான்ஸில் வசிக்கும்-மண்கும்பானைச் சேர்ந்த,திரு-திருமதி விஜேந்திரன் (விஜயன்)-பிறேமராணி தம்பதிகளின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு-29.04.2016 வெள்ளிக்கிழமை அன்று பகல்-அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்-கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு சிறப்புணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கருணை உள்ளத்தோடு தமது பிறந்த நாளின் போது -ஆதரவற்ற மாணவர்களின் பசிபோக்கும்-திரு-திருமதி விஜேந்திரன் (விஜயன்)-பிறேமராணி தம்பதிகளை-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் திருவருளினால்-எல்லாச் செல்வங்களும் பெற்று வாழ வேண்டும் என்று வாழ்த்துகின்றோம்.
இந்நிகழ்வானது-அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும்-122 வது சிறப்புணவு வழங்கும் நிகழ்வாகும்.