யாழ் தீவகம் புங்குடுதீவு கிழக்கு கண்ணகைபுரத்தில் கோவில் கொண்டு அருள்பபாலிக்கும் கண்ணகை அம்மன் என அழைக்கப்படும்-ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம்-கடந்த 07.04.2016 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,தினமும் திருவிழாக்கள் நடைபெற்று-20.04.2016 புதன்கிழமை அன்று தேர்த் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
தேர்த்திருவிழாவின் போது அம்மனுக்குச் சாத்திய பட்டு-66ஆயிரம் ரூபாக்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதுடன்-மேலும் அம்மனுக்கு நேர்ந்து விடப்பட்ட-சேவல் ஆறாயிரம் ரூபாக்கள் ஏலத்தில் விற்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-தேர்த்திருவிழாவின் நிழற்படத் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.