மண்டைதீவு,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் நினைவு தினத்தில் நடைபெற்ற-இரு அறப்பணி நிகழ்வுகள்-வீடியோ விபரங்கள் இணைப்பு!

மண்டைதீவு,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் நினைவு தினத்தில் நடைபெற்ற-இரு அறப்பணி நிகழ்வுகள்-வீடியோ விபரங்கள் இணைப்பு!

allaiyoor-copy-15-768x791

யாழ். மண்டைதீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி கிழக்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவு தினத்தினை (திதி) முன்னிட்டு-17.04.2016 ஞாயிறு அன்று அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்,அன்னாரின் புதல்வர் திரு ஏகாம்பரம் அன்புக்கரன் அவர்களின் நிதி அனுசரணையில்-கிளிநொச்சியில் இரண்டு இடங்களில் அறப்பணி நிகழ்வுகள் நடைபெற்றன.

01-கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்து மாணவர்களுக்கு-17.04.2016 ஞாயிறு அன்று பகல் மதிய சிறப்புணவு வழங்கப்பட்டது.இங்கு மொத்தம் 410 மாணவ,மாணவிகள் 3 பிரிவாக பிரிக்கப்பட்டு-3 இடங்களில் தங்க வைக்கப்பட்டு கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றனர்.

2-கிளிநொச்சி உருத்திரபுரத்தில் அமைந்துள்ள-திருக்குடும்ப சிறுவர் மகளிர் இல்ல மாணவர்களின் நலன் கருதி-அவர்கள் கல்வி கற்பதற்குத் தேவையான சில தளபாடங்களுடன் மேலும் இரண்டு பெரிய மின் விசிறிகளும் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.இந்த இரண்டு நிகழ்வுகளிலும்-அல்லையூர் இணையத்தின் அறப்பணியாளர் திரு இ.சிவநாதன் அவர்கள் சென்று கலந்து கொண்டார்.

இரக்க சிந்தையோடு,தமது தந்தையாரின் நினைவு நாளில்-இவ்விரு அறப்பணிகளையும் மேற்கொண்ட,அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு……

கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம்-

கிளிநொச்சி திருக்குடும்ப சிறுவர் மகளிர் இல்லம்-

அல்லையூர் இணையம்-ஆகியன  மனமார்ந்த நன்றிதனை தெரிவிப்பதோடு-அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டி நிற்கின்றோம்.

இந்நிகழ்வானது- அல்லையூர் இணையத்தின்-ஆயிரம் (1000) தடவைகள் அன்னதானம்,என்னும் திட்டத்தின் 120 வது சிறப்பு அறப்பணி நிகழ்வாகும்.

12991976_1048477861893142_482262807_o timthumb Akampaaram-apr16-1-768x1086h (2) h (1) h (3) h (4) h (5) h (6) h (7) h (8) h (9) h (10) h (11) h (12) h (13) h (14) h (15) h (16) h (17) h (18) h (19) h (21) h (22) sd (3) sd (4) sd (6) sd (7) sd (8) sd (9) sd (12) sd (13) sd (14)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux