பிரான்ஸில் வசிக்கும்-சித்ராங்கன்,அனுஷியா தம்பதிகளின் முதலாம் ஆண்டு திருமண நாளினை (06.04.2016 புதன்கிழமை)முன்னிட்டு-அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்,கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைந்துள்ள-மகாதேவா சிறுவர் இல்ல மாணவ மாணவிகளுக்கு மதிய சிறப்புணவு வழங்கப்பட்டதுடன்-மேலும் இவ்வில்லத்தில் தங்கியுள்ள வயதில் குறைந்த இரு மாணவிகளின் எதிர்கால நன்மை கருதி,அவர்களின் பெயரில் சிறிய தொகை பணமும் வைப்பிலிடப்பட்டது.
இதற்கான நிதியினை தம்பதிகள் வழங்கியிருந்தனர்.
அத்தோடு இலங்கை பழைய மாணவர் சங்கங்களின் ஒன்றியம் பிரான்ஸ் முன்னெடுத்து வரும்-தாயக மாணவர்களின் கல்விக்கு உதவிடும் திட்டத்தில் இணைந்து இரண்டு மாணவர்களின் கல்விக்கும் தம்பதிகள் உதவியுள்ளனர்.
தமது முதலாவது திருமண நாளின் போது-கருணையோடு அறப்பணிக்கும்,கல்விப்பணிக்கும்-உதவிய சித்ராங்கன்-அனுஷியா இளம் தம்பதியினர்-இறைவன் அருளால்,எல்லாச் செல்வங்களும் பெற்றுச் சீரும் சிறப்புடனும் வாழ வேண்டும் என்று வாழ்த்துகின்றோம்.
வாழ்த்துவோர்….
அல்லையூர் இணையம்-தீவகம்-பிரான்ஸ்
மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம்-கிளிநொச்சி
இலங்கை பழைய மாணவர்களின் ஒன்றியம்-பிரான்ஸ்