இலங்கையில் பிரசித்திபெற்ற-பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருநாள் திருவிழா-கடந்த 27-02-2016 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நற்கருணை திருவிழாவினைத் தொடர்ந்து ,மறுநாள் 28.02.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை விஷேட திருப்பலி மற்றும் திருச்சுற்றுப்பவனியுடன் திருவிழா நிறைவு பெற்றது.
பாலைதீவு புனித அந்தோனியாரின் பெருநாள் விழாவினை-உலகமெல்லாம் புலம்பெயர்ந்து வாழும் எம் மக்கள் பார்த்து மகிழ்ந்திடவேண்டும் என்ற நோக்கோடு பல சிரமங்களுக்கு மத்தியிலும்-அந்தோனியாரின் கருணையுடன்-அல்லையூர் இணையத்தினால் முழுமையாகப் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்கள் மற்றும் வீடியோப் பதிவுகளை உங்களின் பார்வைக்காக எடுத்து வந்துள்ளோம்.
எமது இணையத்தின் நிழற்படப்பதிவாளர் திரு இ.சிவநாதன் அவர்கள் -முதல்நாள் பாலைதீவுக்குச் சென்று மறுநாள் மாலைவரை தங்கிநின்று 100க்கும் அதிகமான படங்களை பதிவு செய்து எடுத்து வந்து எமக்கு அனுப்பிவைத்துள்ளார் அவருக்கு உங்கள் சார்பில் எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.