ஜெர்மனியில் வசிக்கும்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,செல்வன் இரத்தினேஸ்வரன் விதுஷன் அவர்களின் 19வது பிறந்த நாளினை (02.03.2016)முன்னிட்டு -அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் அமைந்துள்ள திருக்குடும்ப சிறுவர் மகளிர் இல்ல மாணவிகளுக்கு சிறப்புணவு வழங்கப்பட்டதுடன்-மேலும் அவர்களின் வேண்டுகோளின் பேரில் பொழுதுபோக்கு விளையாட்டுப் பொருட்களும்-செல்வன் இரத்தினேஸ்வரன் விதுஷன் அவர்களின் பெற்றோர்கள் வழங்கிய நிதியில் வாங்கி அன்பளிப்புச் செய்யப்பட்டன.
இந்நிகழ்வில் -அல்லையூர் இணையத்தின் அறப்பணியாளர் திரு இ.சிவநாதன் அவர்கள் நேரடியாகச் சென்று கலந்து கொண்டார்.
செல்வன் இரத்தினேஸ்வரன் விதுஷன்-கல்வியிலும்,விளையாட்டிலும் சிறந்து விளங்கி மேலும் வெற்றிகளைப் பெற-ஆண்டவன் துணை புரிய வேண்டி வாழ்த்துகின்றோம்.