கச்சத்தீவு புனித அந்தோனியாரின் வருடாந்த பெருவிழா கடந்த சனிக்கிழமை 20.02.2016 அன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியவில் யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையால் ஒப்புகொடுக்கப்பட்ட திருப்பலியுடன் திருவிழா இனிதே நிறைவடைந்தது.
அல்லையூர் இணையத்தினால்-முழுமையாகப் பதிவு செய்யப்பட்ட-பெருவிழாவின் முழுமையான வீடியோப்பதிவு-நிழற்படத் தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
அனுசரணை….
இவ்விழாவிற்கான அனுசரணையினை- பரிஸ் மாநகரில் அமைந்துள்ள மோகன் யுவலறி மாட்-நகைமாளிகை நிறுவனத்தினர் வழங்கியிருந்தனர்.
சனிக்கிழமை மாலை தேவாலயத்தின் முன் அமைக்கப்பட்டிருந்த கொடிமரத்தில் கொடியேற்றும் வைபவம் நடைபெற்றதுடன் தேவாலயத்தில் அமைந்துள்ள புனித அந்தோனியார் திருவுருவச் சிலைக்கு மலர், சந்தன மாலைகள் செலுத்தப்பட்டு திருப்பலி இடம்பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற சிலுவைப் பாதை நிகழ்ச்சியில் இரு நாடுகளைச் சேர்ந்த அருட்தந்தைகளும் அருட் சகோதரிகளும் சிலுவையேந்தி தேவாலயத்தை சுற்றி 11 இடங்களில் சிலுவைப் பாதை நடத்தினர்.
இதில், இந்தியா, இலங்கையைச் சேர்ந்த பக்தர்கள் இரவு முழுவதும் புனித அந்தோனியார் திருவுருவச் சிலைக்கு மலர் மாலைகளைச் செலுத்தி வழிபட்டனர்.
திருவிழாவில் இலங்கையிலுள்ள நெடுந்தீவு, யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர்கள், மற்றும் சிவகங்கை மறைமாவட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயர்கள், முதன்மை குருமார்கள் மற்றும் இரு நாடுகளைச் சேர்ந்த ஏழாயிரத்துக்கும்அதிகமான பக்தர்கள் எனக் கலந்துகொண்டனர்.