வேலணை மத்திய கல்லூரிக்கும்,மருத்துவ மனைக்கும் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

வேலணை மத்திய கல்லூரிக்கும்,மருத்துவ மனைக்கும் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

sd (1) (2)

இலங்கை  சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்றஉறுப்பினருமான திருமதி  விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் – வேலணை பிரதேச மருத்துவமனைக்கும்-மத்திய  கல்லூரிக்கும் 18.2.2016 வியாழக்கிழமை அன்று  மதியம் 1,00மணியளவில்-திடீர் விஜயம் ஒன்றினை மேற் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ மனையில்  புதிதாக அமைக்கப்பட்டு வரும் – வெளிநாேயாளர் கட்டடத்தை பார்வையிட்டதுடன்-மேலும்  இப்புதியகட்டடத்தில் ஏற்பட்டுள்ள சில குறைபாடுகளை பார்வையிட்டு கேட்டறிந்து கொண்டதாகவும்- அத்தோடு மருத்துவமனையின் குறைகளையும் கேட்டு அறிந்துகாெண்டதாகவும் தெரிய வருகின்றது.

இவ் மருத்துவமனையானது பலகுறைபாடுகளுடன் தொடர்ந்து செயலாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதேபோல் வேலணை மத்திய கல்லூரிக்குச் சென்ற அமைச்சர்-கல்லூரியை,தேசிய பாடசாலையாக-தரமுயர்த்த தான் முயற்சி மேற்கொள்வதாக-உறுதியளித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வேலணைபிரதேச செயலகத்தில்-வியாழக்கிழமை அன்று நடைபெற்ற-அபிவிருத்தி ஒருகிணைப்புக் குழுக் கூடடத்திற்கு வருகை தந்திருந்த அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் அருகில் அமைந்திருந்த வேலணை பிரதேச மருத்துவ மனை மற்றும் வேலணை மத்திய கல்லூரி ஆகியவற்றிக்கு  விஜயம் செய்திருந்தார் என்றே தெரிவிக்கப்படுகின்றது.

sd (2) (2) sd (3) (2) sd (4) (2) sd (5) (3) sd (6) (2) sd (8) (1) sd (9) (1) sd (10) (2) sd (11) (1)

Leave a Reply