அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் பெருநாள் விழாவின் முழுமையான வீடியோப்பதிவு இணைப்பு!

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின்  வருடாந்த பெருநாள் விழாவின் முழுமையான வீடியோப் பதிவினை கீழே இணைத்துள்ளோம்.
முதல் முறையாக உலகமெல்லாம் பரந்து வாழும் கார்மேல் அன்னையின் பெருநாளை அவரது பக்தர்கள் மதவேறுபாடின்றி கண்டு தரிசிக்க வேண்டும் என்ற நோக்கோடு அல்லையூர் இணையத்தின் பலத்த முயற்சியின் பலனாக இந்த வீடியோப்பதிவு உங்கள் முன் சமர்ப்பிக்கப்படுகின்றது.

இந்த வீடியோப்பதிவினை மேற்கொள்வதற்கான அனுசரணையினை-எங்கள் கிராமத்தைச்சேர்ந்தவர்களான-
திரு ஏரம்பு வேலும் மயிலும்( மண்கும்பான் பிரான்ஸ்)
திரு செல்லப்பெருமாள் வரதராஜா(அல்லைப்பிட்டி பிரான்ஸ்)
திரு பொன்னுத்துரை ஸ்ரனிலோஸ் (அல்லைப்பிட்டி பிரான்ஸ்)
திரு கதிர்காமு மோகனசுந்தரம்(அல்லைப்பிட்டி பிரான்ஸ்) ஆகியோர் வழங்கியிருந்தனர்.அவர்களுக்கும் புனித கார்மேல் அன்னையின் அருள்கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம்.
உணவு வழங்குதல்
அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர்கள் திரு,திருமதி இரத்தினசபாபதி சிவயோகலட்சுமி  தம்பதிகளின் நினைவாக அவர்களின் புதல்வர்களின் நிதிப்பங்களிப்புடன்-அல்லையூர் இணையத்தின் அனுசரணையில் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களின் மேற்பார்வையில் -500 பார்சல்கள் உணவு வழங்கப்படடன.
இருகரம் கூப்பி நன்றி தெரிவிக்கின்றோம்
அல்லையூர் இணையத்தின் மீது நம்பிக்கை வைத்து-நாம் கேட்டபோது மறுக்காமல் உதவிகள் புரிந்த அனைவருக்கும் எமது இணையத்தின் சார்பில் இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

//www.youtube-nocookie.com/v/njHiH7MxyI0?hl=fr_FR&version=3
//www.youtube-nocookie.com/v/_eL1keZVzcw?hl=fr_FR&version=3
//www.youtube-nocookie.com/v/nT_iIhl8rAA?hl=fr_FR&version=3
//www.youtube-nocookie.com/v/e8rmvMNNBQA?version=3&hl=fr_FR

Leave a Reply