யாழ் தீவகத்தில்,அல்லைப்பிட்டி முதல் வேலணை வரையான-வடக்குக் கடற்கரைப் பகுதிகளில், பெருந்தொகையான பறவைகள் காணப்படுவதாகவும்-இவை பார்பதற்கு அழகாகக் காட்சி தருவதாகவும் முகநூல் நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பறவைகளில், அதிகளவில் நாரைகளே காணப்பட்டாலும்,வெளிநாட்டுப் பறவைகளும் தென்படுவதாக நேரில் பார்த்தவர்கள் பலர் தெரிவிக்கின்றனர்.
தீவகம் மண்டைதீவில் பறவைகள் சரணாலயம் ஒன்று அமைப்பதற்கான முன் ஏற்பாடுகள் முன்னர் செய்யப்பட்ட போதிலும்-அத்திட்டம் பின்னர் காலவரையின்றி கைவிடப்பட்டுள்ளதாக உள்ளூர்வாசி ஒருவர் எமக்குத் தெரிவித்தார்.
பறவைகள் சரணாலயம் மண்டைதீவில் அமையுமேயானால்-பெருந்தொகையான உல்லாசப் பயணிகள் தீவகத்திற்கு படையெடுத்து வருவார்கள் எனவும்-அவர் கூறினார்.