அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்-அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த,அமரர் திருமதி ஆறுமுகம் அகிலாண்டம் அவர்களின் 5வது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு -கிளிநொச்சியில் அமைந்துள்ள திருக்குடும்ப மகளிர் சிறுவர் இல்லத்தில் வசிக்கும் மாணவிகளுக்கு 13.02.2016 சனிக்கிழமை அன்று மதிய சிறப்புணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் அல்லையூர் இணையத்தின் அறப்பணியாளர்கள் இருவர் கலந்து கொண்டதுடன்- மேலும் லண்டனிலிருந்து வருகை தந்த அன்னாரின் மருமகனும் கலந்து கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திருக்குடும்ப மகளிர் இல்லத்தில் 40 மாணவிகள் தங்கியிருந்து கல்விகற்று வருவதாகவும்-இவர்களின் கல்விக்கு மேலதிக உதவிகள் தேவைப்படுவதாகவும்-வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.இரக்க சிந்தையுள்ளவர்கள் உதவிட முன்வருவார்கள் என நம்புகின்றோம்.
அல்லைப்பிட்டியைச் சேர்ந்த-அமரர் திருமதி ஆறுமுகம் அகிலாண்டம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகின்றோம்.