தீவகம் வேலணை பிரதேச மருத்துவமனையின் மருத்துவர் R.S,வீரசிங்கா அவர்கள் மாற்றலாகிச் செல்வதனையிட்டு-அவருக்கு சிறியளவில் பிரியாவிடை நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
வேலணை பிரதேச மருத்துவமனையில் கடந்த 23 மாதங்களாக மருத்துவர் R.S,வீரசிங்கா அவர்கள் சிறப்பாக மருத்துவ சேவையாற்றியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
தற்பாேது மேற்படிப்புக்காக கொழும்புக்கு மாற்றலாகி செல்லும்,இவரது சேவையைப் பாராட்டியே இப்பாராட்டு நிகழ்வு கடந்த 09/02/2016 அன்று நடத்தப்பட்டதாக தெரிய வருகின்றது.
களுத்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட- மருத்துவர் R.S,வீரசிங்கா அவர்கள் இலங்கையின் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவராவார்.இவரது தந்தையார் ஓய்வு நிலை பாடசாலை அதிபர் ஆவார்.
மருத்துவர் திரு,R.S,வீரசிங்கா அவர்கள் வேலணை பிரதேச மக்களின் நன்மதிப்பை பெற்றவா் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.