லண்டனில் வசிக்கும்-வேலணை மேற்கு முடிப்பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த,பெரியவர் சமூக ஆர்வலர்-கொடைவள்ளல் திரு பொன்னப்பா பரராஜசிங்கம் அவர்கள் தமது 85வது பிறந்த நாளை 06.02.2016 சனிக்கிழமை அன்று-அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டிலும்-நேரடி ஒழுங்கு படுத்தலிலும்-வன்னியில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் இல்லத்து மாணவர்களோடு சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தார்.
லண்டனில் இருந்து வருகை தந்த பெரியவர் திரு பொன்னப்பா பரராஜசிங்கம் அவர்கள்-தமது குடும்பத்தினர் மற்றும் அல்லையூர் இணையத்தின் அறப்பணியாளர் திரு இ.சிவநாதன் ஆகியோருடன் மகாதேவா ஆச்சிரமத்திற்குச் சென்று அங்கு ஜந்து மணிநேரங்களுக்கும் மேலாக தங்கி நின்று-மாணவர்களுக்கு மதிய சிறப்புணவு வழங்கியதுடன்-மேலும் அனைத்து மாணவர்களுக்கும் வேண்டிய கற்றலுக்கான அப்பியாசக்கொப்பிகளை கொடுத்து மகிழ்ந்ததுடன் -23 கிலோ கேக் பெறப்பட்டு தமது கரங்களால் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கி மகிழ்ந்து கொண்டார்.
வேலணை மத்திய கல்லூரிக்கு (20 பரப்புக்கும் மேல்) காணியினை வாங்கி கொடுத்துதவியதுடன்-மேலும் சைவப்பிரகாசா வித்தியாலயத்தில் கல்விபோதிக்கும் 2 தொண்டர் ஆசிரியர்களுக்கான மாதாந்த வேதனத்தையும் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக வழங்கி வருகின்றார். அத்தோடுஇவ்விரண்டு பாடசாலைகளுக்கும் வேண்டிய குடிநீர் (குழாய் ) வசதியையும் ஏற்படுத்திக் கொடுத்து உதவிள்ளார்.
எமது தீவகம் வேலணையைச் சேர்ந்த பெரியவர் திரு பொன்னப்பா பரராஜசிங்கம் அவர்கள்-நோய்நொடியின்றி-நீண்ட ஆயுளுடனும்-ஆரோக்கியத்துடனும் வாழ-வேலணை முடிபிள்ளையார் என்றும் துணை நிற்க வேண்டும் என்று வேண்டி வாழ்த்தி நிற்கின்றோம்.