கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கதிர்காமநாதன் நேற்று கொழும்பில் காலமானார் தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர் தனது 72 ஆவது வயதில் நேற்று அதிகாலை 5 மணியளவில் அன்னார் இயற்கை எய்தினார்.
கொழும்பு தமிழ் சங்கத்தின் தலைவராகவும்,அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உயர் பதிவிகளிலும் கதிகாமநாதன் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது
நயினாதீவு முத்தையா தம்பதிகளின் ஒரே மகனாகப் பிறந்த இவர் ஆரம்பக் கல்வியை சுன்னாகம் நாகேஸ்வரி வித்தியாசாலையைத் தொடர்ந்தும் நயினாதீவு கணேச வித்தியாசாலையிலும், நயினாதீவு மகா வித்தியாலயத்திலும், உயர் கல்வியை சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியிலும் கல்வி கற்றார்.
1970ம் ஆண்டு இவர் தொழில் ஸ்தாபனம் ஒன்றை நிறுவி வளர்ச்சி கண்டு 2000 ஆம் ஆண்டு தொழிலை நிறுத்தி சமூக, சமய தமிழ்த் தொண்டை முன்னெடுத்து சென்று அந்த முயற்சியில் பல நிறுவனங்களில் பொறுப்பான பதவிகளை வகித்தவரும் ஆவர்.
1998ஆம் ஆண்டு முதல் உலகச் சைவப்பேரவையின் இலங்கைக் கிளையின் செயலாளராகவும், 2002ம் ஆண்டு முதல் கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் துணைத்தலைவராகவும், 2006ஆம் ஆண்டு முதல் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பிரதி செயலாளராகவும், 2008 முதல் கொழும்பு விவேகானந்தா சபையின் துணைத் தலைவராகவும், நயினா தீவு சமூக பொருளாதார கல்வி கலாசார அமைப்பின் ஆரம்பகால துணைத்தலைவராகவும், 2010 முதல் 2016 ஆம் ஆண்டு வரை தலைவராகவும், பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
இவர் பல சர்வதேச மாநாடுகளில் கலந்து பெருமை பெற்றவரும் ஆவர். அத்துடன் 15இற்கும் மேலான கொளரவப் பட்டங்களை பெற்றவருமாவார்.