யாழ் தீவகம் வேலணை மத்திய கல்லூரி வளாகத்திற்குள் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ நடராஜப்பெருமான் திருக்கோவில் புனராவர்த்தன மகா கும்பாபிஷேகம் கடந்த 24.01.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
வேலணை மத்திய கல்லூரி வளாகத்திற்குள் 1982ஆம் ஆண்டு அமைக்கப்பட்டிருந்த நடராஜப்பெருமானின் திருக்கோவிலே-தற்போது பல லட்சம் ரூபாக்கள் செலவில் புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
அல்லையூர் இணையத்திற்கு கிடைக்கப்பெற்ற-கும்பாபிஷேகத் திருவிழாவின் நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.