இலங்கையில் அதிகரித்துவரும் வீதிவிபத்துக்களால் தினமும் உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன-படங்கள் சிறப்புக் கட்டுரை இணைப்பு!

இலங்கையில் அதிகரித்துவரும் வீதிவிபத்துக்களால் தினமும் உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன-படங்கள் சிறப்புக் கட்டுரை இணைப்பு!

இலங்கையில் நாடளாவிய ரீதியில் தினசரி இடம்பெறும் விபத்துக்களின் எண்ணிக்கை தற்காலத்தில் அதிகரித்துள்ளது. அன்றாடம் இடம்பெறும் விபத்துக்களினால் அதிகமானவர்கள் உயிரிழப்பதுடன், காயத்துக்குள்ளாகி அவயவங்களையும், உ​டமைகளையும் இழந்து வருகின்றர். வீதிப் போக்குவரத்தில் நிச்சயமற்ற நிலைமை காணப்படுகின்றது.

கோர விபத்துக்கள் காண்பவரை மயிர்க்கூச்செறியச் செய்கின்றன. மற்றும் சில விபத்துக்கள் எம்மை வியப்பிலாழ்த்துகின்றன. மொத்தத்தில் விபத்துக்கள் வாழ்க்கையில் மாறாத வடுக்களையும், உளக் காயங்களையும் ஏற்படுத்துகின்றன. விபத்துக்களில் இருந்து பாதுகாப்புப் பெறுவது குறித்து நாங்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரீதியில் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துக்களில் 49 சதவீதமானவை அதிகரித்த வேகத்தினால் இடம்பெறுகின்றன. மேலும் 43 சதவீதமான விபத்துக்கள் சாரதிகள், வாகன ஓட்டுனர்களின் கவனக் குறைவு, கட்டுப்பாட்டை இழப்பதன் காரணமாக இடம்பெறுவதாக மோட்டாார் போக்குவரத்துப் பொலிஸ் பிரிவினரால் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து விழிப்படைய வேண்டிய தேவையும், அவசியமும் சாரதிகளுக்கும், பயணிகளுக்கும் உண்டு.

கடந்த 2015 ஜனவரி -01ம் திகதி முதல் டிசம்பர் -27ம் திகதி வரையான காலப் பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களின் உயிரிழப்பு விபரங்களும் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.

குறித்த காலப் பகுதியில் மாத்திரம் 2722 பேர் விபத்துக்களினால் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 777 பாதசாரிகள், 814 மோட்டார் சைக்கிளோட்டிகள், 183 மோட்டார் சைக்கிள் பின்னாசனத்தில் அமர்ந்து பயணித்தவர்கள், 198 சாரதிகள், 486 பயணிகள், 250 சைக்கிளோட்டிகள், ஏனையோர் 14 போர் அடங்குகின்றனர்.

நாளொன்றுக்கு சுமார் 101 வீதி விபத்துக்கள் பதிவாகி வருவதாகவும் சுட்டிக் காட்டப்படுகின்றது. கடந்த வருடத்தில் அதிகூடிய 718 விபத்துக்கள் மேல் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளன. இது 2014ம் ஆண்டு இடம்பெற்ற விபத்துக்களுடன் ஒப்பிடுகையில், 294 விபத்துக்கள் அதிகரித்துள்ளதுடன், 318 பர் அதிகம் மரணத்தைத் தழுவியுள்ளனர்.

2014ம் ஆண்டு ஜனவாரி 01 முதல் நவம்பர் 27 வரையான காலப் பகுதியில், மொத்தம் 2404 ​ேபர்விபத்துக்களில் உயரிழந்துள்ளனர். இவர்களில் 719 பாதசாரிகள், 732 மோட்டார் சைக்கிளோட்டிகள், 172 பின்னாசனத்தில் அமர்ந்து சென்றவர்கள், 155 சாரதிகள், 391 பயணிகள், 225 சைக்கிளோட்டிகள், 10 பர் ஏனையோராக உள்ளனர்.

2014ம் ஆண்டில் இடம்பெற்ற விபத்துக்களுடன், 2015ம் ஆண்டு விபத்துக்களை ஒப்பிடும் போது உயிரிழப்புக்களின் அதிகரிப்பு எண்ணிக்கையை தெளிவாகத் ​ெதரிந்து கொள்ள முடியும். பாதசாரிகள்- 58, மோட்டார் சைக்கிளோட்டிகள்- 32, பின்னாசனத்தில் அமர்ந்து சென்றவர்கள் -11, சாரதிகள்- 43, பயணிகள் -95, சைக்கிளோட்டிகள்- 25, ஏனையோர் 14 ​ேபர்என அறிக்கையிடப்பட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு விபத்துக்களின் எண்ணிக்கையையும், உயரிழந்தவர்களின் எண்ணிக்கையும் மாகாண ரீதியாக வருமாறு, மேல் மாகாணம்- 718 விபத்துக்களில், 750 ​ேபர் உயரிழப்பு. வயம்ப மாகாணம் -382 விபத்துக்களில் 404 உயிரிழப்பு, தென் மாகாணம் -310 விபத்துக்களில் 332 உயிரிழப்பு, சப்ரகமுவ மாகாணம் – 236 விபத்துக்களில், 266 ​ேபர் உயரிழப்பு, வடமத்திய மாகாணம் – 59 விபத்துக்களில் 262 உயிரிழப்பு, மத்திய மாகாணம் – 23 விபத்துக்களில், 202 உயிரிழப்பு, கிழக்கு மாகாணம் – 38 விபத்துக்கள், 188 உயிரிழப்பு, வடமாகாணம் – 33 விபத்துக்களில், 193 உயிரிழப்பு, ஊவா மாகாணம் – 110 விபத்து, உயிரிழப்பு 125.

2015ம் ஆண்டு விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மாகாண ரீதியாகவும் அதிகரித்துள்ளமை விஷேட கவனிப்பிற்குரியது. மேல் மாகாணம்- 49. வயம்ப மாகாணம் -44, தென் மாகாணம் -11, சப்ரகமுவ மாகாணம் – 35, வடமத்திய மாகாணம் -62, மத்திய மாகாணம் – 31, கிழக்கு மாகாணம் – 41, வடமாகாணம் -42, ஊவா மாகாணம் -3.

நாட்டில் தினசரி இடம்பெறும் விபத்துக்களில் அதிகமானவை வாகன விபத்துக்களாக உள்ளன. போக்குவரத்துப் பொலிஸார் நாடளாவிய ரீதியில் கடமையில் இருந்து இவற்றை கண்காணித்து வருகின்ற போதிலும், சாரதிகளில் அதிகமானவர்கள் இவை குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளாதவர்களாகவே காணப்படுகின்றனர். இதனால் அதிகம் விபத்துக்களையும், இழப்புக்களையும் எதிர்கொள்வது தவிர்க்க முடியாததாக உள்ளது.

பொறுப்பற்ற அல்லது கவனக்குறைவான வாகன ஓட்டம், வேகக் கட்டுப்பாட்டை இழத்தல், அதிகரித்த வேகம், பிழையான முந்திச் செல்லுகை, பிழையான திசையில் வாகனத்தைச் செலுத்துதல், மதுபோதையில் வாகனம் செலுத்துதல், கவனக் குறைவான திரும்புகைகள் என்பன விபத்துக்களுக்கான பிரதான காரணங்களாக குறிப்பிடப்படுகின்றன. இவை தவிர வீதிகளில் அதிகரித்துள்ள கட்டாக்காலிகளின் நடமாட்டம், தூக்கம் என்பனவும் காரணமாகும்.

வேகக் கட்டுப்பாட்டை இழக்கும் சாரதிகளுக்கு வாகனத்திலுள்ள பயணிகள் அதுகுறித்த சமிக்ஞை, அறிவுறுத்தல்களை அவ்வப்போது வழங்க வேண்டும். அனைவரும் கூட்டுப்பொறுப்புடன் தொழிற்பட்டு விபத்துக்களிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கு உறுதி பூண வேண்டும்.

முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள், துவிச்சக்கர வண்டி என்பன கோர விபத்துக்களில் அதிகம் சம்பந்தப்படுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. நாட்டில் அன்றாடம் இடம்பெறும் குற்றச் செயல்களிலும் மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கரவண்டிகள், அதன் சாரதிகள் ஆகியோர் அதிகம் சம்பந்தப்படுகின்றனர் என்பதை பொலிஸ் மற்றும் ஊடகச் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.

நாட்டிலுள்ள வீதிப் போக்குவரத்துச் சட்டங்கள், வீதி ஒழுங்கு நடைமுறைகளை சாரதிகள் அல்லது வாகன ஓட்டுனர்கள் அதிகம் மதிப்பதில்லை. இதன் காரணமாகவும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்மையை எவரும் மறந்து விடலாகாது. நாட்டுச் சட்டங்கள், வீதிப் போக்குவரத்து ஒழுங்குகள் ஒருபுறமிருக்க, சாரதிகள் தொடர்ந்தும் வித்தியாசமான அணுகுமுறைகளையே கடைப்பிடித்து வருகின்றனா். இதன் விளைவு கோர விபத்தாக அமைந்து விடுகின்றது.

தற்காலத்தில் அதிகமானவர்களினால் விரும்பப்படும் பொதுப்போக்குவரத்து வாகனப் பயணங்கள் கூட தற்காலத்தில் அதிகம் நம்பிக்கையிழந்துள்ளன. வீட்டிலிருந்து பயணம் புறப்படுபவர் மீண்டும் வீட்டை வந்தடைவதில் நிச்சயமற்ற தன்மை உள்ளது. வாகனப் பயணங்கள் இன்று மக்களினால் நம்பிக்கை இழக்கக் காரணம் என்ன, என்பதை நாங்கள் ஒவ்வொருவரும் அறிந்து கொள்வதுடன், நம்பிக்கைக்குரிய பயணமாகவும் மாற்ற முயற்சிக்க வேண்டும்.

இலகு பயணம், குறைந்த செலவு, நினைத்த மாத்திரத்தில் சேவையை பெற்றுக் கொள்ளக் கூடிதாயிருத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அதிகமானவர்களினால் விரும்பப்படும் முச்சக்கரவண்டிப் பயணம், மோட்டார் சைக்கிள் பயணம் என்பனவும் இன்று சமூகத்திலுள்ளவர்கள் மத்தியில் நம்பிக்கையிழந்துள்ளதுடன், அதிகம் அச்ச நிலையையும் ஏற்படுத்தியுள்ளது என்றால் அதனை எவரும் மறுக்காது ஏற்றுக் கொள்வா்.

நாட்டில் அன்றாடம் இடம்பெறும் கோர விபத்துக்களில் முச்சக்கர வண்டிகள் அதிகம் சம்பந்தப்படுகின்றன. தினசரி இடம்பெறுகின்ற அதிகளவிலான குற்றச் செயல்களிலும் முச்சக்கரவண்டி சாரதிகள் அதிகம் சம்பந்தப்படுகின்றனர் என்பதை பொலிஸ் மற்றும் ஊடகச் செய்திகள் நமக்கு தெளிவுபடுத்துகின்றன.

அதிகமான விபத்துக்களில் முச்சக்கரவண்டி, மோட்டாார் சைக்கிள், துவிச்சக்கர வண்டி என்பன சம்பந்தப்படுவதையும், இளவயதினர் விபத்துக்குள்ளாவதையும் அதிகம் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. மாத்திரமன்றி அலுவகம் பாடசாலைக்கு செல்லும் நேரம் அல்லது வீடு திரும்பும் நேரம் என்பனவற்றின் போது இடம்பெறும் விபத்துக்களின் எண்ணிக்கை மற்றும் வங்கிகளின் கருமபீடங்கள் மூடப்படும் நேரத்திற்கு அண்மித்த நேரங்களில் இடம்பெறும் விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுவதாக​ெதரியவந்துள்ளது.

நாட்டலுள்ள போக்குவரத்துச் சட்டங்கள் ஒழுங்குவிதிகளை மோட்டார்சைக்கிளோட்டிகள், முச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் அல்லது அதன் சாரதிகள் அதிகம் மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக நிலவுகின்றது. ஏனைய வாகனச் சாரதிகள், ஓட்டுனர்களை விடவும் முச்சக்கர வண்டிகளின் சாரதிகள் தொடர்ந்தும் வித்தியாசமான நடைமுறைகளையே கடைப்பிடித்து வருகின்றனர்.

சைக்கிள்களும் தற்காலத்தில் அதிகம் விபத்தில் சிக்குகின்றன. சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாதவர்கள் மோட்டார் சைக்கிளைச் செலுத்துதல், அதிகரித்த வேகம், கட்டுப்பாட்டை இழத்தல், தலைக்கவசமின்றி பயணித்தல், தலக்கவசம் அணிந்தும் பாதுகாப்புப் பட்டி அணியாதிருத்தல், மேலதிக சுமைப் பொருட்களுடன் பயணித்தல், இருவருக்கு மேற்பட்டவா்கள் பயணித்தல் என்பன மோட்டாார்சைக்கிள் விபத்துக்களுக்கு பிரதான காரணமாக உள்ளன.

எந்தரக வாகனமாக இருந்திட்ட போதிலும் சாரதிகள் அல்லது வாகனமோட்டிகள் பதற்றப்படாது, நிதானத்துடன் தொழிற்பட வேண்டும். போக்குவரத்துச் சட்டங்களை மதிக்க வேண்டும். எதிரே பயணிப்பவர்கள் குறித்தும், பாதசாரிகள் குறித்தும் அதிகம் கவனம் கொண்டவர்களாக அவர்களது தொடர் செயற்பாடுகள், பணிகள் அமைய வேண்டும். இவ்வாறு தொழிற்படும் போது நிச்சயம் கோர விபத்துக்களைத் தவிர்த்துக் கொள்ளக் கூடியதாய் இருக்கும்.

துவிச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் கவனயீனமாக தொழிற்பட்டு, விபத்தில் சிக்கிய சம்பவங்கள் அதிகம் பதிவாகியுள்ளன.

தற்காலத்தில் பாடசாலை மாணவர்கள் அதிகம் துவிச்சக்கரவண்டிப் பாவனையாளர்களாக உள்ளனர். இவர்களுக்கு போக்குவரத்துச் சட்டங்கள், சாலை விதிகள் குறித்து அறிவுறுத்தப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகள் பிரதேச ரீதியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

தற்காலத்தில் பிரதான வீதிகளில் அதிகரித்துள்ள கட்டாக்காலி ஆடு, மாடுகளின் நடமாட்டம் காரணமாகவும் விபத்துக்கள் அதிகரித்துள்ளன. பகல், இரவு என்று பாராது வீதிகளில்்நடமாடும் அதிகரித்த கட்டாக்காலிகளினால் வீதிப் போக்குவரத்துப் பயணிகள், சாரதிகள் அதிகம் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனா். இவ்விடயத்தில் உள்ளுராட்சி சபைகள், வீதி அபிவிருத்தி அதிகார சபை என்பன அவசர நடவடிக்கை மேற்கொண்டு விபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற உதவ வேண்டும்.hg

 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux