அல்லைப்பிட்டியைச் சேர்ந்தவரும்-பிரான்ஸில் வசித்து வருபவரும்-அல்லையூர் இணையத்தின் அறப்பணிகளுக்கும் ஆலயப்பணிகளுக்கும்-தொடர்ந்து உதவிவருபரும்-மண்மறவாத மனிதருமாகிய,திரு சுப்பிரமணியம் இராஜலிங்கம் (எஸ்.ஆர்)அவர்கள் தமது 65வது பிறந்த நாளை-19-01-2016 அன்று பரிஸில் அமைந்துள்ள தமது இல்லத்தில் கொண்டாடினார்.
அன்றைய தினம் அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள மூன்றுமுடி அம்மன் ஆலயத்தில் விஷேட அபிஷேக ஆராதனைகளுடன்-அன்னதானமும் வழங்கப்பட்டது.மேலும் அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்-கிளிநொச்சியில் அமைந்துள்ள பக்கவாத பராமரிப்பு இல்லத்தில் தங்கியுள்ளவர்களுக்கு மதிய சிறப்புணவு வழங்கப்பட்டதுடன்- அங்கு தங்கியுள்ள இரு சிறுமிகளின் எதிர்கால நன்மைகருதி -சிறுவர் சேமிப்புத் திட்டத்தில் சிறிய பணத்தொகையும் வைப்பிலிடப்பட்டது.
இவற்றிக்கான நிதியினை திரு எஸ்.ஆர் அவர்கள் வழங்கியிருந்தார்-அவருக்கு எமது நன்றிதனைகாணிக்கையாக்குகின்றோம்.