இம்முறை யாழ் தீவகத்தின் அனைத்துப்பகுதிகளிலிலும்,விவசாயிகளினால் நெல் பயிரிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மண்டைதீவு முதல் அனலைதீவு வரையான தீவகத்தின் அனைத்துக் கிராமங்களிலிலும், பருவகால நெற்செய்கையில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்ததுடன்-இவர்களுக்கு வேண்டிய விதை நெற்கள் மற்றும் உரவகைகள் என்பன மானிய விலையில் வழங்கப்பட்டதாகவும்- மேலும் தெரிய வருகின்றது.
கடந்த வருடம் அல்லைப்பிட்டி-மண்கும்பான் பகுதிகளில் விவசாயிகள் எவரும் நெற்செய்கையில் ஈடுபடவில்லை என்பதும்-இந்த வருடம் இப்பகுதிகளில் நெல் பயிரிடப்பட்டிருப்பதாகவும் மேலும் தெரிய வருகின்றது.கட்டாக்காலி கால்நடைகளின் தொல்லை-கடும்மழை வெள்ளம் மற்றும் அதிகரித்துச் செல்லும் விலைவாசி என்பனவற்றினை எதிர் கொண்டு பயிரிடப்பட்ட நெல்-தமக்கு அதிக பலனைத் தரும் என விவசாயிகள் உறுதியாக நம்புகின்றனர்.
தீவக விவசாயிகள் வரும் தைப்பூசத்தன்று நாளுக்கு நெல் அறுவடையினை ஆரம்பிக்கவுள்ளதாக மேலும் தெரிய வருகின்றது.