அல்லையூர் இணையம் நான்காவது ஆண்டாக-வன்னியில் அமைந்துள்ள மகாதேவா ஆச்சிரமத்தில் தங்கி கல்விபயிலும் ஆதரவற்ற,400க்கும் அதிகமான மாணவர்களின் நலன் கருதி,உங்கள் பேராதரவுடன் தைப்பொங்கல் விழாவினை ஏற்பாடு செய்து மிகச் சிறப்பாக 15-01-2016 வெள்ளிக்கிழமை அன்று நடத்தியிருந்தது.
இங்குள்ள ஆண்கள் பிரிவு-பெண்கள் பிரிவு மற்றும்சிறுவர் பிரிவு என,மூன்று பிரிவுகளில் பொங்கலிடப்பட்டதுடன்-அல்லையூர் இணையத்தின் சார்பில்-எமது அறப்பணியாளர் திரு இ. சிவநாதன் அவர்கள் தீவகத்திலிருந்து முதல் நாள் இரவு மகாதேவா ஆச்சிரமத்திற்குச் சென்று தங்கி நின்று பொங்கல் விழாவில் கலந்து கொண்டார்.
இப்பொங்கல் விழாவிற்காக-அல்லையூர் இணையத்தினால் திரட்டப்பட்ட ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாக்களில் செலவுகள் தவிர்த்து-ஒரு லட்சம் ரூபாக்களை,பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களின் ஊடாக-மகாதேவா ஆச்சிரம நிர்வாகத்திடம் பொங்கலிற்கு முதல் நாள் ஒப்படைத்திருந்தோம்-அதற்கான பற்றுச்சீட்டு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
அல்லையூர் இணையத்தின் மீது நம்பிக்கை வைத்து-நிதி வழங்கிய,கருணை உள்ளங்களின் பெயர் விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
01-அமரர்கள் திரு,திருமதி இரத்தினசபாபதி சிவயோகலட்சுமி தம்பதியினர் சார்பாக வழங்கப்பட்ட நிதி(மண்டைதீவு-அல்லைப்பிட்டி-பிரான்ஸ்)
02-திரு ஏரம்பு வேலும் மயிலும்(மண்கும்பான் -பிரான்ஸ்)
03-திரு நல்லசிவம் கேதீஸ்வரன்( மண்கும்பான் -லண்டன்)
04-திரு குலசேகரம்பிள்ளை சிறிஸ்கந்தராஜா (வேலணை-பிரான்ஸ்)
05-திரு வைரவநாதன் தயாகரன் (மண்டைதீவு-கனடா)
06-திரு தில்லைநாதன் நிரோஜன்(வேலணை- பிரான்ஸ்)
07-திரு இலட்சுமிகாந்தன் குணேஸ் (அல்லைப்பிட்டி- பிரான்ஸ்)
08-திரு செல்லப்பெருமாள் வரதராஜா (அல்லைப்பிட்டி- பிரான்ஸ்)
09-திரு இராசரத்தினம் பாலச்சந்திரன் (அல்லைப்பிட்டி- பிரான்ஸ்)
10-திரு பத்மநாதன் திருமாறன்(அல்லைப்பிட்டி- பிரான்ஸ்)
11-திரு நவநீதன் (மண்கும்பான்-பிரான்ஸ்)
12-திரு இராமச்சந்திரன் ஆரூரன்( அல்லைப்பிட்டி-லண்டன்)
13-திரு வாமதேவன் சத்தியதேவன்(அல்லைப்பிட்டி- பிரான்ஸ்)
14-திரு செல்லையா சிவா (அல்லைப்பிட்டி- பிரான்ஸ்)
இவர்கள் அனைவர்களுக்கும்-மகாதேவா ஆச்சிரமத்து மாணவர்கள் சார்பிலும்-அல்லையூர் இணையம் சார்பிலும்-இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.