யாழ் தீவக பிரதான வீதியில்-அல்லைப்பிட்டி மூன்றாம் கட்டைப் பகுதிக்கும்,மண்கும்பான் புதிய தங்கு விடுதிக்கும் இடைப்பட்ட பகுதியில்,வீதியோரம் நிற்கும் பல மின் கம்பங்களின் அடிப்பகுதி விரிவடைந்து கடுமையாக சேதமடைந்திருப்பதாகவும்-இவை மழைநீருக்குள் நிற்பதனால், முறிந்து விழக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும்-அதனால் உயிராபத்துக்கள் கூட ஏற்படலாம் எனவும் பொதுமக்கள் பலர் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து இம்மின்கம்பங்களின் மேல் இணைக்கப்பட்டிருக்கும் மின் கம்பிகளின் ஊடாகவே-உயர்வலுக்கொண்ட மின்சாரம் தீவகத்திற்கு செல்கின்றது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இம்மின்கம்பங்களைச் சுற்றி தற்காலிகமாக-கம்பிகளால் கட்டப்பட்டுள்ள போதிலும்-கடும் காற்றடித்தால் மின்கம்பங்கள் சாய்வதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடைவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.