தீவகம் வேலணை பிரதேச சபையின் செயலாளராக,நீண்டகாலம் சிறப்பாக பணியாற்றிய மண்டைதீவைச் சேர்ந்த,திரு முத்துலிங்கம் இராஜகோபால் அவர்கள்-இடமாற்றம் பெற்றுச் செல்வதனை முன்னிட்டு-அவருக்கு சிறப்பான பிரியாவிடை வைபவம் நடத்தப்பட்டது.கடந்த 06.01.2015 புதன்கிழமை அன்று வேலணையில் அமைந்துள்ள பிரதேசசபையின் மண்டபத்திலேயே பிரிவுபசார நிகழ்வு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மண்டைதீவைச் சேர்ந்த,திரு முத்துலிங்கம் இராஜகோபால் அவர்களின் தலைமையிலேயே வேலணை பிரதேசசபை இயங்கி வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.