அல்லைபிட்டியில் இயங்கும் கல்வி அபிவிருத்தி அமைப்பினால் (AEDO) 5ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையிலும் மற்றும், க.பொ.த சாதாரண பரீட்சையிலும் சித்தியடைந்த 23 மாணவர்களுக்கு ஒளிவிழா நிகழ்வில் வைத்து பதக்கம் அணிவித்து கௌரவித்து பாராட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்லைபிட்டி கல்வி அபிவிருத்தி அமைப்பின் ஒழுங்கமைப்பில் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் அல்லைபிட்டியை, சேர்ந்த திரு அருள்நேசன் ஜெப்டின் அவர்களின் நிதி அனுசரணையில் இந்தவருடம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 3 மாணவர்களும்,மேற்பட்ட புள்ளிகளை பெற்ற 2 மாணவர்களுடன் மேலும் கடந்த வருடம் நடைபெற்ற , O/L பரீட்சையில் சித்தியடைந்த 17 மாணவர்களையும் இணைத்து மொத்தம் 22 மாணவர்களுக்கு கடந்த (27-12-2015 ) அன்று நடைபெற்ற புனித பிலிப்புநேரியார் ஆலய ஆண்டு ஒளிவிழாவில் வைத்து பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.