தீவகம் புங்குடுதீவில்”புதிய ஒளி”என்ற அமைப்பு உதயம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகம் புங்குடுதீவில்”புதிய ஒளி”என்ற அமைப்பு உதயம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

1170766_127099884332698_7093063916593827176_n

புங்கையின் புதிய ஒளி என்ற அமைப்பு கடந்த 4/01/2016 நண்பகல் வேலணை பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது-  இவ் நிறுவனம் அரச அதிகாரிகளின் வழிகாட்டலில் சில நடைமுறைகளை பின்பற்றி அமைப்பு உறுப்பினர்களின் ஒப்புதல்களுடன் யாப்பு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

புங்கையின் புதிய ஒளி அமைப்பின் தலைமை நிர்வாகக்குழு
தலைவர் செல்வன் கவியரசன்
உபதலைவர் செல்வி பாசுதா
செயளாலர் செல்வன் கயன்
உபசெயளாலர் செல்வி டொறினா
பொருளாலர் செல்வன் மோகன்.

மாற்றங்களை எதிர்பாக்கும் புங்கை மாந்தர்களின் அன்பும் ஆதரவும் இவ்வமைப்பை ஊக்கப்படுத்தும்.

புங்குடுதீவில் சக மாணவர்களுக்கு கிடைக்கப்படவேண்டிய தங்கு தடையற்ற கல்வி மற்றும் ஒளிமயமான எதிர்காலம் குறித்தும் புங்குடுதீவு மண்ணில் நிலை நிறுத்தப்படவேண்டிய அழகிய சுற்றுச்சூழல் மற்றும் நிலையான பொருளாதார வளங்கள் குறித்தும் ஒவ்வொரு மனங்களிலும் எற்படுத்தப்படவேண்டிய நற்சிந்தனை நோக்கிய மாற்றங்கள் குறித்தும் தீர்க்கமான தீர்வுகளும் சிந்தனைகளும் இவ் வமைப்பில் உண்டு. என,று இவ்வமைப்பின் ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

தாம் யாருக்கும் போட்டியான அமைப்பு அல்ல. புங்குடுதீவின் தாய் மற்றும் சகல சகோதர அமைப்புகளுடன்தாம் கைகோர்த்து சமாந்தரமாய் பயணிக்க பெருவிருப்பு உள்ளதாக அறிவிக்கின்றனர். 

SAMSUNG CAMERA PICTURES

184554_127099514332735_4571483183388217542_n 5628_127099757666044_2804783993566847464_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux