யாழ் தீவகத்தின் பிரதான வீதிக்கருகில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் -மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானுக்கு மிகப்பிரமாண்டமான முறையில் ஏழுதள இராஜகோபுரம் அமைக்கப்பட்டு வருவது நீங்கள் ஏற்கனவே அறிந்த செய்தியாகும்.
விநாயகப் பெருமானுக்கு அமைக்கப்பட்டு வரும் இராஜகோபுரத்தின் ஏழாவது தளத்தின் இறுதிக் கட்டுமானப்பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் திருவருள் துணைகொண்டு மிகப் பிரமாண்டமான கலை வேலைப்பாடுகளுடன்-அமைக்கப்பட்டு வரும்-இராஜகோபுரத்தின் கும்பாபிஷேகம் இந்தவருடம் நடைபெறவுள்ள வருடாந்த மகோற்சவத்திற்கு முன்னர் நடத்துவதற்கான முன் ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிய வருகின்றது.
மண்குப்பான் வெள்ளைப்புற்றடி வீரக்கத்தி விநாயகருக்கு,மிகக் குறுகிய காலத்தில்-வானுயர எழுந்து வரும் ஏழுதள இராஜகோபுரத்தினை-பக்தர்கள் தீவகத்தின் தற்போதைய அதிசயமாகவே பார்வையிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அல்லையூர் இணையத்தினால் சில தினங்களுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட-இராஜகோபுர கட்டுமானப்பணிகளின் தற்போதைய நிலையினை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.