புது வருடத்தினை முன்னிட்டு-பரிஸ் லாச்சப்பல் பகுதியில் அமர்ந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் விஷேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
பரி்ஸிலும்,பரிஸின் புறநகர் பகுதிகளிலும் வசிக்கும் பல நூற்றுக்கணக்கான மக்கள் ஆலயத்திற்கு வருகை தந்து வழிபாடுகளில் பக்திபூர்வமாக ஈடுபட்டதனை காணக்கூடியதாக இருந்தது.
இந்த வருடம் பிறக்கின்ற ஆண்டு தமக்கு நன்மைகளைத் தர வேண்டும் என்று ஆண்டின் முதல் நாளான 01.01.2016 வெள்ளிக்கிழமை அன்று முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு திரண்டு வந்த பக்தர்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்து பக்தியோடு வழிபட்டுச் சென்றதனை காணக்கூடியதாக இருந்தது.
அன்னதான நிகழ்வு
கடந்த பல வருடங்களாக- புதுவருடத்தன்று அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு விசுவலிங்கம் பிரபா( அப்பன்)அவர்களினால் வருகின்ற அனைவருக்கும் சிறப்பாக அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது.ஆலயத்திற்கு வருகின்ற பக்தர்கள் அனைவரும்-சாமிதரிசனம் முடித்த பின்னர் நீண்டநேரம் வரிசையில் காத்திருந்து வயிறாற உணவுண்டு செல்வதனை நேரடியாக காணமுடிந்தது.
அல்லையூர் இணையத்தினால் 01.01.2016 அன்று பதிவு செய்யப்பட்ட-நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.