சிறுபான்மை இனமாக இருக்கின்ற எங்களது சமுகத்தினை அழிய விடாது பாதுகாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் எங்களிடம் உள்ளது. என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா .இளஞ்செழியன் அவர்கள் தெரிவித்துள்ளார்
கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் திகதி முதல் 2015ம் ஆண்டு டிசம்பர் 31ம்திகதி வரை மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதவானாக கடமையாற்றி மாற்றாகி செல்லும் நீதிவான் எம்.ஐ.வகாப்தீன் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வும் அவரது சேவையை நினைவுபடுத்தும் வகையிலுமென பழமரக்கன்று நடுகையும் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற வளாகத்தில் நேற்று (29-12-2015) பகல் நடைபெற்றுள்ளது. முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் அவர்கள் உரையாற்றுகையில்
கிளிநொச்சி மாவட்டத்தில் சமுக விரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு முன்மாதிரியாக செயற்பட்டவர் நீதிவான் எம்.ஐ.வகாப்தீன்; அவர்கள் யுத்தத்தினால் சின்னாபின்னமாகிப் போன கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களின் கலை கலாச்சார சமுக விழுமியங்களை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டு சமுக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த சமுக விரோத கும்பல்களை கட்டுப்படுத்துவதற்கு முன் மாதிரியாக இருந்து செயற்பட்டவர் நீதிவான் எம்.ஐ.வகாப்தீன் அவர்கள் சிறுபான்மை இனமாக இருக்கின்ற எங்களது சமுகத்தினை அழிய விடாது பாதுகாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் எங்களிடம் உள்ளது. அந்த உயரிய பணியினை நீதிவான் எம்.ஐ.வகாப்தீன் அவர்கள் செய்திருக்கின்றார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நிகழ்வின் முன்னதாக மாற்றலாகிச் செல்லும் நீதிவான் எம்.ஐ.வகாப்தீன் அவர்களது சேவையை நினைவுபடுத்தும் வகையில் பயன்பதரு பழ மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வில் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.வகாப்தீன் மற்றும் நீதிமன்றப்பதிவாளர் நீதிமன்ற எழுதுவினைஞர் உள்ளிட்டோர் பயன்தரு மரங்களை நாட்டினார்.
நிகழ்வில் சட்டத்தரணிகள் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் சமுதாயம் சார் திணைக்கள உத்தியோகத்தர்கள் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பொலிசார் எனப்பலர் கலந்துகொண்டனர்