அல்லையூர் இணையம்  2016ம் ஆண்டில் நடாத்தும் முதலாவது அறப்பணிக்கு உதவிட முன்வாரீர்-விபரங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையம் 2016ம் ஆண்டில் நடாத்தும் முதலாவது அறப்பணிக்கு உதவிட முன்வாரீர்-விபரங்கள் இணைப்பு!

வன்னியில் அமைந்துள்ள மிகப் பெரிய குருகுலமான மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்து கல்விகற்று வரும்-பெற்றோர்களை இழந்த,ஆதரவற்ற மாணவர்களுக்காக,அல்லையூர் இணையம் தொடர்ந்து நான்காவது ஆண்டாக பொங்கல் விழாவினை நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றது.scan0054-3578175_142818142509816_100003448945950_101643_1241109046_n

கடந்த மூன்று வருடங்களாக நடைபெற்ற,தைப்பொங்கல் விழாவிற்காக-அல்லையூர் இணையம் திரட்டிய நிதியினை-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களின் மூலம் நேரடியாக –

மகாதேவா ஆச்சிரம நிர்வாகத்திடம்  ஒப்படைக்கப்பட்டதுடன்-அல்லையூர் இணையத்தின் சார்பில் பல இளைஞர்களும் மற்றும் மண்டைதீவைச் சேர்ந்த,சமூக ஆர்வலர் திரு.வசந்தரூபன் அவர்களும் நேரடியாகச் சென்று பொங்கல் விழாவினைச் சிறப்பாக நடத்தி மாணவர்களின் சந்தோசத்தில் பங்கெடுத்துக் கொண்டனர்.

கடந்த 2013 ஆம் ஆண்டு தைப்பொங்கல் விழாவிற்காக-ஒரு இலட்சத்து 60 ஆயிரம் ரூபாக்களும்

கடந்த 2014 ,2015 ஆம் ஆண்டுகளில் தைப்பொங்கல் விழாவிற்காக-90 ஆயிரம் ரூபாக்களையும்,உங்களிடமிருந்து திரட்டி மகாதேவா ஆச்சிரம நிர்வாகத்திடம் அல்லையூர் இணையம் வழங்கியிருந்தது-இதற்கான பற்றுச்சீட்டுக்களும் அன்று எமது இணையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தன.

பொங்கல் விழா-2016

அன்பான கருணை மிக்க உள்ளங்களே!

வன்னியில் அமைந்துள்ள மகாதேவா ஆச்சிரம மாணவர்களுக்காக-அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில் 15-01-2016 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ள தைப்பொங்கல் விழாவிற்கான நிதி உதவியினை-கருணைமிக்க உள்ளங்களிடமிருந்து நம்பிக்கையோடு எதிர்பார்க்கின்றோம்.

அனைத்து தொடர்புகளுக்கும்*****0033651071652 

மின் அஞ்சல்*******info@allaiyoor.com

Picture-039-680x1024111 (27)111 (41)111 (44)111 (36)

Leave a Reply