சேவைக்கு வராமலேயே கடலில் மூழ்கிய அம்புலன்ஸ் படகு-அனலைதீவு மக்கள் கவலை-படங்கள் விபரங்கள் இணைப்பு!

சேவைக்கு வராமலேயே கடலில் மூழ்கிய அம்புலன்ஸ் படகு-அனலைதீவு மக்கள் கவலை-படங்கள் விபரங்கள் இணைப்பு!

canada_analathivu_1

நிழற்படங்கள்-நயினை எம்.குமரன்

தீவகம் அனலைதீவு  மக்களின் அவசர மருத்துவ சேவைகளுக்காக வடமாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் 60 இலட்சம் ரூபா செலவில் கொள்வனவு செய்து வழங்கப்பட்ட அம்புலன்ஸ் படகு சேவையை ஆரம்பிக்காமலேயே குறிகட்டுவான் துறைமுகப் பகுதியில் கடலில் மூழ்கியது.

குறிகட்டுவான் துறைமுகத்தில் இந்தப் படகு தரித்து நின்ற நிலையில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாகவே மூழ்கியதாகத் தெரியவருகிறது. இந்நிலையில் சிறிய கடற்கொந்தளிப்பிற்கே ஈடுகொடுக்க முடியாத குறித்த படகை நோயாளர் சேவைக்கு எப்படி பயன்படுத்த முடியும் என அனலைதீவு பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளதுடன், இதுகுறித்த தமது அச்சத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

தமது அவசர மருத்துவ தேவகைளுக்காக அம்புலன்ஸ் படகொன்றை வழங்குமாறு அனலைதீவு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தக் கோரிக்கையை ஏற்றே வடமாகாண சபை 60இலட்சடம் ரூபா செலவில் இந்தப் படகைக் கொள்வனவு செய்து வழங்கியது.இந்நிலையிலேயே சேவையை ஆரம்பிக்க முன்னரே அது கவிழ்ந்தது.

திட்டமிடல்கள் இன்றியும் குறித்த பகுதி கடலின் தன்மை குறித்து ஆராயாமலும் படகு கட்டுமானம் இடம்பெற்றமையே இந்நிலைக்குக் காரணமென அனலைதீவு பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பிரதேச கடல் ஓட்டிகளின் ஆலாசனைகளைப் பெற்று படகுக்கட்டுமானங்களை மேற்கொண்டிருந்தால் இவ்வாறான வீண் விரயத்தைத் தடுத்திருக்க முடியும் எனவும் அவர் கூறினர்.

மேலும் இந்தப் படகு தீவகக் கடற்பரப்பில் செலுத்துவதற்கு பொருத்தமானதல்ல. இதனை சேவையில் ஈடுபடத்துவதனூடாக விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

12391799_972735602799156_2312607020946681424_n 1929026_980783001994416_1660396308726251944_n 1012552_980782958661087_3985509670361312823_n 1170799_980783011994415_9104733898180484633_n 12341414_972735532799163_4491030021969106855_n (1) 12341432_972735572799159_5571947580386391157_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux