நிழற்படங்கள்-நயினை எம்.குமரன்
வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையுடன்-வேலணை
பிரதேச கலாசாரப் பேரவையும்,பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய கலாசாரப் பெருவிழா-28.12.2015 திங்கட்கிழமை அன்று பகல் 2 மணியளவில்,மண்டைதீவு மகாவித்தியாலயத்தில் சிவஸ்ரீ சி.அகிலேஸ்வரசர்மா அரங்கில், வேலணை பிரதேச செயலர் திருமதி மஞ்சுளாதேவி சதீஷன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் பிரதம விருந்தினராக,மேலதிக அரசாங்க அதிபர் உயர் திரு . பா.செந்தில் நந்தனன் அவர்களும்,சிறப்பு விருந்தினராக,வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர்-திருமதி . வனஜா செல்வரெத்தினம் அவர்களும்,
யாழ் மாவட்ட கலாசார உத்தியோகத்தர்திருமதி . மாலினி கிருஷ்ணானந்தன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவில், கலைநிகழ்வுகளுடன்- கலைஞர்கள் கௌரவிப்பும் அதைத் தொடர்ந்து தென்தீபம் சுடர் 02 என்ற நூல் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.